2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

க.பொ.த(உ/த) பரீட்சையில் கல்முனை ஸாஹிரா கல்லூரி ஏற்படுத்தியிருக்கும் சாதனை ஒரு வரலாற்று நிகழ்வாகும்:

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் தேசிய சொத்து என வர்ணிக்கப்படும்  கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி ஏற்படுத்தியிருக்கும் சாதனை ஒரு வரலாற்று நிகழ்வாகும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்லூரிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லீம்களின் கல்வி  வரலாறு எழுதப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் நாமம் நிச்சயம் அதில் இடம்பெற்றேயாகும்.அந்த அளவுக்கு கல்வித்தரத்தில் இன்று சிகரத்தை தொட்டுவிட்டது.

வெளியிடப்பட்ட உயர்தர பரீட்சை முடிவுகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கும் பெருமையை தந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்திலிருந்து பொறியியியல் துறைக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுள் 60 வீதத்தினை இக்கல்லூரி பெற்றுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் பல்வேறு துறைகளிலும் கல்விபெறும் வாய்ப்பைப் பெற்றிருப்பது கண்டு இக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியல் இரட்டிப்பு மகிழ்சியடைகின்றேன்.

ஓவ்வொரு வருடமும் இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் அதிகளவு மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி வருகின்ற இக்கல்லூரியில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெரும் தொகையான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியும் கல்வி பெறுகின்றனர்.

மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதில் இக்கல்லூரி  முஸ்லிம் தமிழ் ஆசிரியர்கள் இரவு பகலாக பட்ட கஸ்டங்களுக்கு பிரதிபலன் கிடைத்துள்ளது.

இவ்வாறான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்தர பரீட்சை முடிவுகளை பெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த கல்லூரி ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் பெற்றோருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X