Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.அஹமட்)
நிந்தவூரில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியாக துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் சுகாதாரச் சீர்கேடுகளையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகாமையிலுள்ள காணிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாலேயே துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது. மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் அங்கு நுளம்புகள் உற்பத்தியாகுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களிலேயே அதிகமாக துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025