2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கொலை குற்றவாளிக்கு மரண தண்டணை

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருதை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

சாய்ந்தமருதை சேர்ந்த ஆதம்பாவா சாஹுல் ஹமீட் என்பவரை கடந்த 2003 மே 6ஆம் திகதி கொலை செய்தமைக்காகவே சாய்ந்தமருது 16 ஆலிம் வீதியை சேர்ந்த யாசீன் பாவா நியாஸ் என்பவருக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திராமணி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இக்கொலை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பந்தப்பட்ட ஆபூபக்கர் முஹம்மட் பழீல் மற்றும் சஹீட் அப்துல் மஜீத் ஆகிய இருவரையும் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X