2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல்  நிர்வாக தெரிவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கழமை 23ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்;. நபவி தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலுக்கு  சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் கீழ் 18 பள்ளிவாசல்கள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X