Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 10 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குதற்கும், தேவையான அவசர உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இன்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடான மாநாடு அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தலைமையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டே இவ்வேண்டுகோளினை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் எந்த நேரத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க தயாராக இருக்க வேண்டும்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கையினை எடுத்துள்ளது. என்றார்.
இதில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், பி.எச்.பியசேன, சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, விமலவீர திஸாநாக்க, உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், புஸ்பராசா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago