Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
வெள்ளம் வடிந்தோடாத நிலையில் நுளம்புப் பெருக்கமும் ஏனைய நோய்க்கிருமிகளும் பெருக்கமடையலாமென அஞ்சுவதால்; பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் பொதுமக்களை கேட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரகாலமாக பெய்த மழை காரணமாக சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முழுப்பிரதேசமும் வெள்ளக்காடாகவே காணப்பட்டது. இன்று ஓரளவு மழை தணிந்திருந்ததனால் வெள்ளநீர் வடிய ஆரம்பித்தபோதிலும் அதிகமான இடங்களிலுள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையொன்று காணப்படுகின்றது.
பிரதேசத்திலுள்ள மலசலகூடங்கள் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பலவிதமான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் நீரினை பருகுவதோடு அதனையும் கொதித்து ஆறவைத்து பருகுமாறும் ஏதாவது தொற்றுநோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் வைத்தியரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறும் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025