Super User / 2011 ஜனவரி 16 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கிழக்கு மாகாணத்தின் முதலாவது தொழிற்பேட்டையை கல்முனையில் அமைத்து தருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியூத்தீன் உறுதியளித்துள்ளார்.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சனிக்கிழமை இரவு பார்வையிடுவதற்காக வருகை தந்த அமைச்சர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை கல்முனையில் சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த உறுதிமொழியையளித்தார்.
அமைச்சருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் றிசாட் பதியுத்தீனால் வெள்;ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக நிதியும் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
7 hours ago
25 Oct 2025
nnjihan Sunday, 16 January 2011 10:13 PM
ரிசாத் வந்தாலும் சரி, ஜனாதிபதி வந்தாலும் சரி, கல்முனை இக்கு ஒரு நிவாரணம் கூட இல்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025