Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். மாறன்)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
அக்கரைப்பற்று 7௮ பொது வீதியிலுள்ள வீட்டில் சாரதியாக கடமையாற்றும் மேற்படி நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வாகனத் தரிப்பிட கராச் கதவைத் திறந்து உழவு இயந்திரத்தை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
கோளாவிலி முதலாம் பிரிவைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சண்முகம் ரஞ்சன் (38 வயது) என்பவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் ஆவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago