Menaka Mookandi / 2011 ஜனவரி 18 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
சுனாமிக்குப் பிந்திய கரையோர புனர்நிர்மாண மற்றும் வளங்கல் பரிபாலன சபையின் நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டு முயற்சியின் கீழ் - விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியுடன் அமுலாக்கப்பட்ட அட்டாளைச்சேனை இறங்குதுறை நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இலங்கை கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினதும் - மீன்பிடி, துறைமுகக் கூட்டுத்தாபனத்தினதும் மேற்பார்வையின் கீழ் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் ஸ்தாபனத்தினால் மேற்படி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி இறங்குதுறையில், மீனவர்கள் ஓய்வு மண்டபம், மீனவர்களின் பொருட்களைப் பாதுகாத்து வைப்பதற்கான அறைகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இந்த இறங்குதுறையை அண்டியதாக, மீனவர்களின் படகுகளுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025