2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்று மேயர் பதவிக்கு அமைச்சர் அதாவுல்லாவின் புதல்வர் போட்டி

Super User   / 2011 ஜனவரி 19 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் புதல்வாரன, சக்கி அதாவுல்லா எதிர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

தற்போது சக்கி அதாவுல்லா அமைச்சர் அதாவுல்லாவின் அந்தரங்க செயலாளராகவும் செயற்படுகின்றார்.

அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபை என்பவற்றில் மாத்திரம் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் பயனளிக்கவில்லை.

அக்கரைப்பற்று பிரதேச சபை மாநகர சபையாக அண்மையில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவினால் தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண சபையில் ஒரு அமைச்சர் மற்றும் தவிசாளர் உட்பட நான்கு உறுப்பினர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0

  • manithan Thursday, 20 January 2011 01:13 AM

    தவத்துக்கு ஆப்புதான்

    Reply : 0       0

    mohamed Thursday, 20 January 2011 12:10 PM

    நல்ல விடயம்

    Reply : 0       0

    manisan Thursday, 20 January 2011 06:20 PM

    எங்கு பாத்தாலும் குடும்ப ஆட்சி ஆரம்பிசிட்டாங்க. கொஞ்சம் மற்றவங்களையும் ஆள விடுங்கப்பா.

    Reply : 0       0

    நான் அவனில்லை Thursday, 20 January 2011 07:11 PM

    ஆல் த பெஸ்ட் சக்கி. அடி தடி அரசியல் அகற்ற அக்கரையூரில் இளைய தலைமைத்துவம் தேவை. நேர்மையான நோக்கம் உள்ளவரை இளைஞர்களின் ஆதரவு உனக்குண்டு.

    Reply : 0       0

    maasfak mohamed Friday, 21 January 2011 02:12 AM

    மண் குதிரையை நம்பி ஆதில் இறங்காதே.

    Reply : 0       0

    maasfak mohamed Friday, 21 January 2011 08:27 PM

    ஆளும் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து வாக்கு கேட்டால் சக்கிக்கு ஆப்புதான்

    Reply : 0       0

    xlntgson Friday, 21 January 2011 10:01 PM

    பிரிய சக்கி, பிரிய சக்கி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .