2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'வாக்களித்த தமிழர்களுக்கு நன்றிக்கடனாக பேரினவாதக் கட்சிகள் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தனர்'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

'இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டு இன்றுவரை தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால் வாக்களித்த தமிழ்மக்களுக்கு   நன்றிக்கடனாக பேரினவாதக் கட்சிகள் ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை படுகொலை செய்தனர் என்பது வரலாறு. எனவே இதனை உணர்ந்து தமிழ்மக்களின் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்' என வேட்பாளர் வே.புவனேந்திரராசா (நகுலன்) தெரிவித்தார்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு   உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

'இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற போகின்றது என அரசு தெரிந்துகொண்டு தனது ஊதுகுழலான சில தமிழ் கயவஞ்சகர்களை கொண்டு பலகோடி ரூபா செலவில் பலபேரை வரவழைத்து தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று தமிழ்மக்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லை என சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக சதிமுயற்சி செய்து வருகின்றது. எனவே இந்த கயவஞ்சகர் கூட்டத்திற்கு தமிழ்மக்கள் தக்கபதிலடி கொடுக்க வேண்டும்.

இதேவேளை, தமிழ்மக்கள் ஒரு தீப்பெட்டிக்கும் ஒரு கிலோ அரிசிக்கும் பேரினவாத கட்சிகளுக்கு தமது உரிமையை விற்று விடுபவர்கள் என பேரினவாதக் கட்சிகள் பகல்கனவு கண்டு இன்று பலகோடி ரூபா செலவுசெய்து பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இவை நீதியாக உழைத்த பணமும் அல்ல. இவர்களின் பாட்டனார் சொத்துமல்ல. தமிழ்மக்களின் பொருளாதாரத்தை அழித்தும், சுரண்டியும், ஏமாற்றியும் வழிப்பறி செய்யப்பட்ட பணம். எனவே இவர்கள் தருவதை வாங்கிக் கொண்டு எங்களை காலாகலமாக ஏமாற்றி பிழைப்பு நடாத்திய பேரினவாத கட்சிகளையும் அதன் ஊதுகுழலான சில தமிழ் குள்ளநரிக் கூட்டத்தினையும் நம்பி இனியும் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபையை ஆட்சிசெய்த சிலர் கடந்த காலத்தில் ஒருநேர சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திரிந்ததுடன் நான்காம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு தமிழ்மக்களை காட்டிக்கொடுத்து இன்று கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்றுவரை தமிழ்மக்கள் பேரினவாதிகளின் கட்சிகளுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ்மக்களை படுகொலை செய்தனர். இதேவேளை பேரினவாதிகள் ஒருவரேனும் தமிழ்மக்களின் கட்சிகளுக்கு இன்றுவரை வாக்களித்தனரா? இல்லை. எனவே தமிழ்மக்களாகிய நாங்கள் ஏன் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும்? அவர்கள் ஏன் எங்களிடம் வாக்கு கேட்கவேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் சிந்திக்கவேண்டும் .

இந்நிலையில் தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்காக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல சவால்கள்களையும் மீறி தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. எனவே தமிழ்மக்களின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ்மக்கள் வாக்களிக்கவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X