2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்திலிருந்து அரசியல் தலைவர்கள் உருவாக கூடாது என்பதில் ஹக்கீம் கண்ணும் கருத்துமாக உள்ளார

Super User   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


கிழக்கு மாகாணத்திலிருந்து அரசியல் தலைமைகள் உருவாக கூடாது என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கின்றார் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை இரவு சம்மாந்துறை பொலிஸ் நிலைய வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அச்சு முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு அமைச்சர் அதாவுல்லா தொடர்ந்து உரையாற்றுகையில்,

"கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் நிம்மதியாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் நிம்மதியினையும்  ஒற்றுமையினையும் சீர்குலைக்கும் நடவடிக்கையினை அந்நிய சக்திகளுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம்; செய்து வருனின்றன.

கிழக்கு மாகாணத்திலிருந்து எந்தவொரு அரசியல் தலைமைகளும் உருவாகிவிடக்கூடாது என்பதில் ஹக்கீம் கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கின்றார்.

அதை இன்னும் செய்து வருகின்றார். அவ்வாறு ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைத்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரங்களை இல்லாமல் செய்யும் கைங்கரியத்தை செய்து வருகின்றார்.

இது இவ்வாறிருக்க, இந்த கிழக்கு மாகாணத்திலே வழுகின்ற மக்களை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் இட்டுச் செல்வதற்கான கைங்கரியத்தை செய்து வருகின்றார்.

பொதுவாக இன்று ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் ஒன்றிணைந்து வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க செயற்பட்டு வருகின்றனர்.

எனவே நமது மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டும். நாம் பெற்றுக் கொண்ட சுதந்தரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதனால் தற்போதுள்ள இன உறவு பாதிக்கப்படாமல் நாம் தொடர்ந்தும் ஐக்கியத்துடன் வாழ சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.



  Comments - 0

  • lebbe Tuesday, 04 September 2012 12:44 PM

    தன்னைதானே தலைவர் என்ரு சொல்பவர்கல் எல்லாம் சமூகத்தின் தலைவர் ஆக முடியாது.

    Reply : 0       0

    NALAM VIRUMBI Tuesday, 04 September 2012 12:57 PM

    இதைதான் அய்யா நீங்களும் அக்கரைபற்றில் செய்கிறீர்கள்.

    Reply : 0       0

    KIYAS Tuesday, 04 September 2012 04:58 PM

    நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் இன்னம் எத்தனை நாளைக்குத்தான் இந்தமாதிரி சொல்வீர்கள்.

    Reply : 0       0

    Roomy Tuesday, 04 September 2012 05:28 PM

    அப்போ, ஹரீஸ், ஜமீல், பஸீர் சேகு தாவூத், ஹஸன் மௌலவி, நஸீர், தவம், ஜவாஹர் சாலி, போன்றோர் கொழும்பு மாவட்டமோ?

    Reply : 0       0

    baawaajee Tuesday, 04 September 2012 06:00 PM

    இவர்களெல்லாம் சீசன் தலைவர்கள் .இவர்களை மக்கள் ஒரு போதும் தலைவர்கள் என்று கூறமாட்டார்கள்.

    Reply : 0       0

    meenavan Wednesday, 05 September 2012 01:55 AM

    கிழக்கு மாகாணத்திலிருந்து அரசியல் தலைமைகள் உருவாவதை ஹக்கீம் விரும்பாவிடினும், நீங்கள் தலைமைக்கு பொருத்தமானவரா? உங்கள் குதிரை அக்கரைபற்றை தாண்டி வருவது சிரமமே, கல்முனை மாநகர தேர்தல் மும்மொழி ஆற்றல் உள்ள ஒருவரை தலைமைக்கு பொருத்தமானவராக உருவாக்கும் என அவா கொண்டிருந்தாலும் மு.கா.வின் தலைமையின் குத்து வெட்டும், பிரதேசவாதமும் அதற்கு ஆப்பு வைத்து விட்டது என்பது நிஜம், பிரதேசவாத அரசியலுக்கு ஆப்பு போடாதவரை மு.கா.வின் தலைவர் ஹகீம், தே.கா.வின் தலைவர் தாங்களே என்பதால் ...உங்கள் காட்டில் மழை ஆனால் முஸ்லிம் சமூகம்......???????

    Reply : 0       0

    abu rifaath Thursday, 06 September 2012 05:29 AM

    என்னையா உங்கட கதை ரொம்ப வித்தியாசமாக உள்ளது!!!!!! இன்னும் ஒரு பொழுது தான் உள்ளது.

    Reply : 0       0

    Akkaraipattan Monday, 10 September 2012 07:30 AM

    அரசியலுக்காக முஸ்லிம்களைப் பிரித்துப் பேசுவது மகா தவறு உலக முஸ்லிம்களே ஒரு சமூகம் தான். பிரதேசம் பார்த்தால் அமைச்சருக்கு மற்ற ஊா் மற்ற மாவட்டம் மற்ற மாகாணத்தில் வாக்களிப்பதும் தவறாகிவிடுமே. எங்கோ இருக்கும் சனாதிபதிக்கு நீங்கள் வாக்களிக்கச் சொல்லவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X