2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் மும்முரம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த வேலைகள் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அம்பாறை மாவட்டக் கச்சேரியிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் இன்றைய தினம் சுமார் 1.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தன என்று அங்கிருக்கும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களின் சுற்றுப்புறச் சூழலில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக நாளைய தினம் 464 நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. இவ்வாறு அளிக்கப்படும் வாக்குகள் 29 நிலையங்களில் எண்ணப்படவுள்ளதாகத் தெரியவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 4 இலட்சத்து 41 ஆயிரத்து 786 பதியப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பதியப்பட்ட வாக்காளர் தொகையானது 4 இலட்சத்து 9 ஆயிரத்து 308 ஆக இருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்தலில் 16 அரசியல் கட்சிகளும், 18 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு.முன்னணி 8 ஆசனங்கiயும், யானைச்சின்னத்தில் மு.காங்கிரஸ் 4 ஆசனங்களையும, ஐ.தே.கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X