2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்,ஏ.ஜே.எம்.ஹனீபா)


கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட  தவராஜா கலையரசனுக்கு அக்கரைப்பற்று மக்களினால் நேற்று திங்கட்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸின் வெற்றியாளர்களைக் கௌரவித்து அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேசசபை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

அக்கரைப்பற்று இசங்கடிச்சீமை கிராம பள்ளிவாசலிலிருந்து துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பித்த இதற்கான ஊர்வலம் அக்கரைப்பற்றின் முழுநகரையும் சென்றடைந்தது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, வெற்றிபெற்ற வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட்சக்கி, பிரதி முதல்வர் எம்.எம்.எம்.ரிஸாம், தவிசாளர் றாசீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸின் வெற்றியாளர்களைக் கௌரவித்து அட்டாளைச்சேனை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும் வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.







  Comments - 0

  • Nafeel Tuesday, 11 September 2012 08:30 AM

    எப்படி சாத்தியம்?

    Reply : 0       0

    gafoo Wednesday, 19 September 2012 08:26 AM

    தேசிய காங்கிரஸுக்கு ஆரிப் சம்சுதீன் கிடைத்தது கல்முனை தொகுதி வெற்றி சபாஷ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X