2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காயம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இரு பாடசாலை மாணவிகள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேசமயம் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X