2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடியிருப்பு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ளமை குறித்து புகார்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

'காரைதீவு பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ளதால் - பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். எனவே, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய அதிகாரிகள் விரைவில் தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும்' என - காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்கான சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்கான சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் - பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே - அங்கு சமூகமளித்திருந்த கிராமப் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராமப் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு தலைவர்கள், உறுப்பினர்கள், கிராமசேவை அதிகாரிகள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X