2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கு அருகாமையில் இருந்த பொலிஸ் சோதனை சாவடி அகற்றல்

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் இருந்த பொலிஸ் சோதனை சாவடியும், வீதித் தடையும் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த 03 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் தென்கிழக்குப் பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகாமையில் இருந்த வீதித் தடையும், பொலிஸ் சோதனைச் சாவடியுமே தற்போது அகற்றப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக சூழலில் பொலிஸ் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டிருந்தமை குறித்து கடந்த காலங்களில் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிருந்தன.
 
சில வருடங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் காலப் பகுதியிலேயே - தென்கிழக்குப் பல்கலைக்கழத்தை அண்டிய பகுதியில் மேற்படி பொலிஸ் சோதனைச் சாவடியும், வீதித் தடையும் அமைக்கப்பட்டன.

அம்பாறை பிராந்தியத சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகணவின் உத்தரவுக்கமையவே - இந்த வீதித் தடையும், சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பொலிஸ் பேச்சாளராகக் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண, அண்மையில் அம்பாறை மாவட்டத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X