2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆற்றுடன் கலந்த கடல் நீர்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஒலுவில் பிரதேசத்திலுள்ள களியோடை ஆற்றுக்கு அருகில் இருந்த நிலப் பகுதிகளில் சில இடங்கள் கடலில் மூழ்கியதையடுத்து ஆற்றுடன் கடல் நீர் கலந்துள்ளது.

ஒலுவில் துறைமுகத்தை அண்டிய கடல் பகுதிக்கு அருகாமையில் களியோடை ஆறு உள்ளது.

கடலின் கரைக்கும் ஆற்றுக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு நிலப்பகுதி காணப்பட்டது.

ஆயினும், தற்போது கடற்கரைக்கும் ஆற்றுக்கும் இடையில் உள்ள நிலப்பகுதியின் சில இடங்களை கடல் அரித்து மூழ்கடித்துள்ளமையை அடுத்து, களியோடை ஆற்றினுள் கடல் நீர் புகுந்துள்ளது.

இது அப் பகுதி மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, இந்தப் பகுதி பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகி வந்த நிலையிலே இவ்வாறு ஆற்றினுள் கடல நீர்; கலந்துள்ளது.

கடுமையான கடலரிப்பு மற்றும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட காலைநிலை மாற்றத்தால் கடலில் ஏற்பட்டுவரும் வரும் பாரிய கொந்தளிப்பு காரணமாக இவ்வாறு ஆற்றினுள் கடல் நீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

களியோடை ஆற்றின் மறுபுறத்தில் பொதுமக்களின் குடியிருப்புகள், ஒலுவில் துறைமுகத்துக்குரிய சுற்றுலா விடுதி மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்துள்ளன.








  Comments - 0

  • DAWOOD Wednesday, 31 October 2012 06:08 AM

    இது நீண்ட கால பிரச்சினை.உடனடியாக கடலரிப்பை தடை செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X