2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மழையினால் பாதிக்கபட்ட மக்களுக்கு வெளிநாட்டு உதவியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                     (ஹனீக் அஹமட்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலைநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவிகளை தாம் நாடியுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு மேலதிகமாகவே இந்த உதவிகளை தான் பெற்றுக் கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்ளூ

'தற்போது நிலவிவரும் தாழுக்கம், கடும் காற்றுடன் கூடிய மழை மற்றும் கடல்கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று, பொதுமக்களும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு அப்பால், வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே வெளிநாட்டு தூதரகங்களின் உதவிகளை நாடியுள்ளேன்.

அசாதாரண காலநிலையால் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி கோரும் நோக்குடன், அவர்கள் பற்றிய விபரங்கள், பாதிப்பின் தன்மை போன்றவற்றினை விளக்கி, வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றுக்கு எழுத்து மூலமான கடிதங்களை நாம் அனுப்பி வைத்துள்ளோம்.

இதேவேளை, எனது அமைச்சினூடாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம்' என்றார்.                                                        

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X