2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் நெற்செய்கை நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை சீராகியதை தொடர்ந்து நெல் செய்கை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உழவு மற்றும் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதோடு, நெற்பயிர்களைக் கொண்ட காணிகளில் களைநாசினி விசிறும் நடவடிக்கைளும் மும்முரமாக நடைபெறுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சுமார் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை இடம்பெறவுள்ளதாக மாவட்டத்துக்குப் பொறுப்பான விவசாய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஆஹமட் சனீர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை விவசாயப் பிராந்தியத்தில் மட்டும் இம்முறை சுமார் 32 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை இடம்பெறவுள்ளதாகவும் உதவி மாவட்டப் பணிப்பாளர் சனீர் கூறினார்.

நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று கிழக்கு, அக்கரைப்பற்று மேற்கு, ஆலிம் நகர், இறக்காமம், தம்பிலுவில், விநாயகபுரம், கோமாரி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்கள் அட்டாளைச்சேனை விவசாயப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றன.

அம்பாறை மாவட்டம் 4 விவசாயப் பிராந்தியங்களைக் கொண்டதாகும். அவற்றில், அட்டாளைச்சேனைப் பிராந்தியமே அதிகளவு நெற்செய்கைக் காணிகளைக் கொண்டதாகும்.

இந்த நிலையில், தற்போதைய பெரும்போகத்தில் பி.ஜி. 94ஃ1 (வெள்ளை), ஏ.ரி. 362 (சிவப்பு) ஆகிய நெல்லினங்களே அதிகமாக விதைக்கப்பட்டு வருவதாக விவசாய திணைக்களத்தின்  அட்டாளைச்சேனைச் பிராந்திய அலுவலக பாடவிதான உத்தியோகத்தர் ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.

அதேவேளை, ஏ.ரி. 366, ஏ.ரி. 307 மற்றும் பி.ஜி. 357 போன்ற புதியவகை நெல்லினங்களை பயிரிடுமாறு விவசாயிகளை தாம் ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X