2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும்சேவை

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
   
காலை 8.30 முதல் மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் ஆள்  அடையாள அட்டை, கடவுச் சீட்டு, பிறப்பு இறப்பு திருமணச் சான்றிதழ், சாரதி அனுமதிப் பத்திரம் ஆகிவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணிப்பிக்க முடியும்.

இவ்வாறான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவுள்ளோர் - தமது கிராமசேவை, சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்களை முன்கூட்டியே சந்தித்து இது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுவதோடு, நடமாடும் சேவைக்கும் சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, காணிப் பிரச்சினைகள், சமுர்த்தி நிவாரணம் மற்றும் சமூகசேவை உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்களுக்கு உள்ள சிக்களுக்கு மேற்படி நடமாடும் சேவையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த நடமாடும் சேவையின் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட செயலக அதிகாரிகள், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X