2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அஷ்ரப் காலத்திலிருந்து அஸீஸுடன் எனக்கிருந்த உறவு மறக்க முடியாது: கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர்

Kanagaraj   / 2012 நவம்பர் 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொத்துவில் அஸீஸ் என்னுடைய நல்ல நண்பர். சாந்தமான குணமுடையவர். குடும்ப விவகாரங்களை என்னுடன் மனம் விட்டுப் பேசுபவராக இருந்தார். மு.காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து அஸீஸுடன் எனக்கிருந்த உறவு மறக்க முடியாது. அவ்வாறானதொரு நண்பரின் மரணச் செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையுமடைந்தேன்' என்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட முன்னாள் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.ஏ. அஸீஸின் மரணச் செய்தி குறித்து, அவர்; விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த செய்தி யில் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ

அஸீஸ்; மக்களுடன் இனிமையாகப் பழகும் ஒரு மனிதர். சாந்தமான குணமுள்ளவர். அவருடைய ஊர் மக்களால் அவர் மதிக்கப்பட்டார். அதனால்தான், 'அஸீஸ் நகரம்' என்று அவருடைய பெயரை ஓர் இடத்துக்கே அப்பிரதேச மக்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். அந்தவகையில், அஸீஸின் மரணமானது அவருடைய பிரதேச மக்களுக்கு மிகப் பெரும் இழப்பாகும்.

மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் அன்புக்குரியவராக அஸீஸ் இருந்தார். அப்போது எனக்கும அவருக்குமிடையில் மிகவும் நெருக்கமான நட்பு நிலவியது. அவருடைய குடும்ப விடயங்களைக் கூட என்னுடன் மனம் விட்டுப் பேசுமளவு எனது நட்பினை அவர் மதித்தார். 

இதேவேளை, மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடனான நெருக்கத்தினால் தனது சொந்த பிரதேசமான பொத்துவிலைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் அஸீஸ் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார். அந்தவகையில், பலரின் வாழ்க்கைக்கு அவர் ஒளியூட்டி, வழிகாட்டினார்.

மேலும், பொத்துவில் பிரதேசத்தில் செங்காமம் என்கிற கிராமம் உருவாவதற்கு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸ் அர்ப்பணிப்போடு உழைத்தார். அதை இன்றும் அங்குள்ள மக்கள் நன்றியோடு நினைவு கூருகின்றார்கள்.

ஏழை மக்களுக்கு உதவிகள் செய்வதில் மிகவும் விருப்பமுடையவரான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸ் மறுமையில் சுவன வாழ்வு கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X