2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாலம் புனரமைப்பின்றி காணப்படுவதால் மக்கள் சிரமம்

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

அம்பாறை, சாளம்பைக்கேணி கிராமத்தினை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியில் அமைந்திருந்த பாலம் கடந்த வருடம் எற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது முற்றாகச் சேதமடைந்திருந்தது.

இப்பாலம் இதுவரை புனரமைக்கப்படாததால் இவ்வீதியினை பயன்டுத்திவரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் எமக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லலை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதானால் இவ்வீதி மழை வெள்ளத்தில் முற்றாக போக்குவரத்தின்றி துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் புனரமைப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X