2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொக்கு சுட்டு வீழ்த்தியவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அட்டாளைச்சேனை, சம்புநகர் வயல் பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக துப்பாக்கியினால் கொக்குகளை சுட்டுவீழ்த்திய ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ள பொலிஸார், சொட்கண் துப்பாக்கி ஒன்றும் 9 கொக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்துஇன்று அதிகாலை 4.30 மணியளவில் அட்டாளைச்சேனை சம்புநகர் வயல் பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X