2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்,
எம்.சி.அன்சார்)

'யுத்தத்தின் பின் பத்திரிகை அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயமர்வில் தமிழ், சிங்கள மொழிகளில் பணியாற்றும் ஏராளமான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டப்ளியூ. தயாரத்ன, அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ், வெகுஜன மற்றும் தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாகாண ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஒழுக்க நெறி, யுத்தத்தின் பின்னர் பத்திரிகையில் அறிக்கையிடல் மற்றும் அதன் சட்ட சூழ்நிலை, யுத்தத்தின் பின்னர் பத்திரிகை கட்டுரை வெளியிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் போன்ற தலைப்புக்களில் தமிழ் பண்டிதர் மடுல்கிரியே விஜேரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன, சிரேஷ்ட ஊடகவியலாளர் கருணாதாஸ சூரிய ஆரச்சி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

முழுநாளாக இடம்பெற்ற இச் செயலமர்வினை அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயம் ஒருங்கிணைத்திருந்தது.

நிகழ்வின் இறுதியில் செயலமர்வில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X