2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அனர்த்த அபாய குறைப்பு நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனை மாநகர சபையில் அனர்த்த அபாய குறைப்பு நிலைய திறப்பு விழா நிகழ்வு மாநகர  சபை கட்டிடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. அனர்த்தங்கள் இடம்பெறுகின்றபோது ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைக்கும் வகையில் மேற்படி அனர்த்த அபாய குறைப்பு நிலையம்  யு.என்-ஹபிடாட் நிறுவனத்தின் அனுசரனையில்  கல்முனை மாநகர சபையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை  மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யுஎன்-ஹபிடாட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்களான லக்ஸ்மன் பெரெரா, திருமதி இந்து, வீர சூரிய, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாநகர சபைஆணையாளர் ஜே.லியாகத்அலி, மாநகர சபை  பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர   சபை உறுப்பினர்கள், திணைக்கள  அதிகாரிகள்  என  பலரும்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X