2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகரசபைக்குரிய நிர்வாகக் கட்டிடத்தை அமைத்துத்தருவதாக உறுதியளிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எம்.எம்.றம்ஸான்,அப்துல் அஸீஸ்)


கல்முனை மாநகரசபைக்கான நிர்வாகக் கட்டிடத்தை அமைத்துத்தருவதாக மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹியிடம், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இணக்கம் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான குழு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரசபைக்கான நிர்வாகக் கட்டிடமின்மை, ஆளணிப் பற்றாக்குறை, நிர்வாகப் பிரிவின் உபயோகத்திற்கான வாகனமின்மை, திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உழவு இயந்திரங்களின்மை, நூலகங்களை தரம் உயர்த்துதல் மற்றும் உள்ளூராட்சிமன்ற வட்டார எல்லைகள் தொடர்பாகவும் கல்முனை மாநகர முதல்வர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது இவ்விடயங்கள் தொடர்பில் முதல்வர்,  அமைச்சரிடம் மனுவொன்றையும் கையளித்தார்.

இந்நிலையில், இவ்விடயங்களை நிவர்த்தி செய்து தருவதாகவும் கல்முனை மாநகரசபைக்கான நிர்வாகக் கட்டிட அமைவிடத்தை நேரில் வந்து பார்வையிட்ட பின்னரே அமைத்துத்தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.நிசார்டீன், ஏ.எம்.பரக்கத்துள்ளா, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், இஸட்.ஏ.எம்.றகுமான், ஏ.விஜெயரட்னம், ஆசியமன்ற நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.வலீத், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் உட்பட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X