2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உடன் உதவுமாறு உத்தரவு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 22 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


பாண்டிருப்பு மேற்கு வட்டை வீட்டுத் திட்டப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலர் உணவுகளை உடன் வழங்குமாறும், அவசியமாயின் பாதிப்புக்குள்ளானோரை குறித்த இடத்திலிருந்து வெளியேற்றுமாறும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளருக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உத்தரவிட்டார்.

பாண்டிருப்பு மேற்கு வட்டை வீட்டுத் திட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன - நேற்று வெள்ளிக்கிழமை அங்கு விஜயம்.

இதன்போதே கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி உத்தரவினை விடுத்தார்.

பாண்டிருப்பு மேற்கு வட்டைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சென்றிருந்த வேளை, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். உதயன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ. ஜெயாகர் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X