2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடி வேம்பு கல்விக் கோட்டத்தில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அதாவது ஆய்வு கூட அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆராயும் மீளாய்வு கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், 5000 பாடசாலை அபிவிருத்திப் பணிகள், கமநெகும திட்டத்தின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் 2013ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஆளணிப் பிரச்சினைகள், எட்டு வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.குணாளன் தலைமையில நடைபெற்ற இம் மீளாய்வுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் பிரத்தியோக செயலாளர் ரீ.ஜெயாகர் மற்றும் ஆலையடிவேம்புக் கோட்டக் கல்விப் பிரிவுக்குட்பட்ட அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X