2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கடலில் மூழ்கி சிறுவன் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.மாறன்)

கல்முனையில் கடலில் மூழ்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கல்முனை மேற்கு, கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம், 13ஆம் இலக்க வீட்டுத்தொகுதியைச் சேர்ந்த ஏ.ஜி.எம்.சப்னாஸ் (வயது 16) என்ற சிறுவனே தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையில் கடலில் மூழ்கியுள்ளார்.

இவருடைய சடலம் இன்று மாலை 4 மணியளவில் சாய்ந்தமருது முகத்துவாரத்தில் கரையோதுங்கியது. இச்சிறுவன் தனது நணபர்களுடன் கடலில் குளிக்கும் போது கடல்சுழி மூலம் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X