2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Super User   / 2013 ஜனவரி 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ தினமான புதன்கிழமை இரவு 8 மணியளவில் அக்கரைப்பற்று 13ஆம் பிரிவு ஹிரா வீதியில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது இரண்டு கிராம் கஞ்சாவுடன் 34 வயது ஆண் ஒருவரையும் அவ்வாறே அக்கரைப்பற்று 11ஆம் பிரிவு பழைய கலசார மண்டப வீதியிலுள்ள வீடு ஒன்றில் சோதனையின் போது கஞ்சா சுருட்டுடன் 61 வயது முதியவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

இதேவேளை ஒலுவில், கோணவடி வீதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்டபோது நான்னு கிராம் கஞ்சாவுடன் 35 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X