2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நாட்டில் அதிகாரம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது: ஹரீஸ் எம்.பி.

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்  அஸீஸ்


நாட்டில் அதிகாரம்  ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது கல்முனை  பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இதனை பிரதம நீதியரசர் தொடர்பான விடயத்தில் இருக்கிறது ஜனாதிபதி நிரூபித்து காட்டியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'வறுமையற்றதோர்  இலங்கை தேசம்' என்ற தலைப்பில் இன்று கல்முனை பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள், சமய நிறுவனம்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்விலே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலாளர் எம். எம். நௌபல் தலைமைல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்டீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • meenavan Wednesday, 16 January 2013 08:38 AM

    நீங்கள் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவரும் இதை அறிந்து வைத்துள்ளனர்,எங்கள் வாக்கு அவரின் சர்வதிகாரதிக்கு துணை போகின்றது என்பது தான் ஆதங்கம்....

    Reply : 0       0

    meenavan Wednesday, 16 January 2013 08:51 AM

    தம்பி ஹரிஸ் உங்களது மேடையில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் பிரசன்னம் மகிழ்ச்சி அளிக்கிறது,என்றாலும் நீங்கள் பிறந்த மண்ணில் ஆரிப் ஏதேனும் அபிவிருத்தி செய்ய முயன்றால் அதற்க்கு இடைஞ்சலாக இருக்க மாட்டீர்கள் தானே..?? நீங்கள் பிறந்த மண்ணில் தான் ஆரிப் சம்சுதீனும் பிறந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

    Reply : 0       0

    jaleel Wednesday, 16 January 2013 09:43 AM

    தம்பி ஹரிஸ் உங்கழுக்கு வயசு பத்தாதுப்பா

    Reply : 0       0

    hameed Thursday, 17 January 2013 12:28 PM

    கல்முனை ஹரீஸ இப்பொளுதுதன் அதிகாரமம் யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்துள்ளார்.ஸபாஷ் வாக்கு அளித்தவர்கட்கு!!!!

    Reply : 0       0

    Kuruvi Saturday, 19 January 2013 11:09 PM

    ஹரிஷ் எம் பி இன் அடுத்த கன்டுபிடிப்பு... எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது.. யாரிடமும் இல்லாத அரசியல் ஞானம் உங்களுக்கு அபரீதமாக உள்ளது சார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X