2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கைக்குண்டை விற்கச் சென்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 22 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன் 

பழைய இரும்புக்கடையில் கைக்குண்டொன்றை விற்பனை செய்வதற்குச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பழைய இரும்புக்கடையில் இக்கைக்குண்டை விற்பனை செய்வதற்காகச் சென்றதாகக் கூறப்படும்  50 வயதுடைய ஒருவரையே விசேட புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

சந்தேக நபர் வீதியிலுள்ள குப்பைமேட்டிலிருந்து குண்டு வடிவில் இரும்பிலான இப்பொருளை கண்டெடுத்துள்ளார். இதனை பழைய இரும்புக்கடையில் விற்பனை செய்வதற்குச் கொண்டுசென்றபோது அது கைக்குண்டென   கடை உரிமையாளர் அடையாளம் கண்டுள்ளார். இந்நிலையில், இதனை விற்பனை செய்ய வந்தவரிடம்  கைக்குண்டெனக் கூறி பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கும் தகவல் கிடைத்த நிலையில் இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், கைக்குண்டையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X