2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை'

Super User   / 2013 ஜனவரி 24 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை என கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதனை நினைத்து பார்க்கும் போது பேய்களோடு சேர்ந்து ஆட்சியில் இருப்பது போன்று எண்ணத் தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாகாண சபை ஆட்சிக் காலத்தில் கூட்டுப் பொறுப்பு, இன ஒற்றுமை, இன ஐக்கியம் எல்லாம் வளர்த்தெடுக்கப்பட்டன. இந்த ஆட்சியிலே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இவைகள் எல்லாம் இல்லாமல் இருப்பது பெரும் கவலையளிக்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாகாண ; பாடசாலைகளில் மூன்று வருடங்கள் அதிபர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தனி நபர் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றும்போதே மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"கிழக்கு மாகாண பாடசாலைகளில் மூன்று வருடங்களாக அதிபர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்க கிழக்கு மாகாண சபை விசேட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கபட்டிருந்த வேளையிலும் கூட, கடந்த 20 ஆண்டு காலமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர்களாக கடமை புரிந்தோர்கள் தங்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி நீதிமன்றம் வரை சென்ற பின் தற்போது ஒரு பகுதி அதிபர்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், இவர்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்குவதற்கு மத்திய  கல்வி அமைச்சின் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் அதிபர்களாக கடமை புரிவோர் பல சவால்களுக்கும் தியாகங்களுக்கு மத்தியில் தங்களுடைய ஆளுமையினூடாக பணி செயகின்றனர்.

பாடசாலைக்கு தலைமை தாங்கி பாடசாலை சமூகத்தோடு இணைந்து தியாக சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாடசாலைக்கு தலைமை கொடுத்து தியாக மனப்பாங்குடன் கடந்த மூன்று வருட காலமாக சேவை செய்துவரும் அதிபர்களின் சேவை பாராட்டத்தக்கதாகும்.

அக்கரைப்பற்றில் உள்ள ஒரு ஆசிரியருக்கு நான்கு இடமாற்றக் கடிதங்களின் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டதாக உறுப்பினர் தவம் குறிப்பிட்டார் அப்போது சபை உறுப்பினர்கள் எல்லோரும் இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனால், இந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அரசியல் பின்னனி ஒன்று இருப்பதனை இந்த சபைக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. கல்முனை, சம்மாந்துறை, கல்வி வலயத்தில்  மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை அருகிலுள்ள கல்வி வலயப் பாடசாலைக்கு சமப்படுத்தும் நோக்கத்துடன் கல்வி அமைச்சால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றார்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலுள்ள மேலதிக ஆசிரியர்களை ஒரு வருடம் மற்றும் இரு வருட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட காலங்களை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் பழைய பாடசாலைக்கு சென்றுள்ளதால் அக்கரைப்பற்று வலயத்தில் குறிப்பாக பொத்துவில் கோட்டத்தில் ஆசிரியர் பற்றார்குறை ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டத்தில் இருந்து 50 ஆசிரியர்களை சில நியாயங்களின் அடிப்படையில் தெரிவுசெய்து பொத்துவில் பிரதேச பாடசாலைகளில்  நிலவும் ஆசியர் பற்றார்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளரும், இடமாற்ற சபையும் இணைந்து எவ்வித அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளனர்" என்றார்.

  Comments - 0

  • saleem Thursday, 24 January 2013 11:14 AM

    இப்பதான் உங்களுக்கு தெரியுதா? ஒற்றுமை இன்மைக்கு காரணமே நீங்கதான் தெரியுமா?

    Reply : 0       0

    kaja Thursday, 24 January 2013 04:02 PM

    அப்படி என்றால் நீங்களும் போய் இந்தமாதிரி எதுக்கும் சம்மந்தம் இல்லாமல் பேச வேண்டாம். நீங்கல் ஒரு அமைச்சராக இருந்துகொன்டு இந்த மாதரி பேசுவது நல்லது அல்ல. தயவூசெய்து நீங்கல் இந்தமாதரி பேசி உங்கல‌ய் மக்கல் சிரிக்கும்படி வெய்க்கவேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X