2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அறுவடை செய்யப்பட்ட நெல் மழைக் காரணமாக வீதியில் குவிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அம்பாறை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக, வயலில் அறுவடை செய்த நெல்லினை வீடு கொண்டு செல்ல முடியாது விவசாயிகள் அவற்றினை வீதியோரங்களில் குவித்து  மூடிவிட்டுச் சென்றுள்ளதை காண முடிந்தது.

இதனால், அறுவடை செய்யப்பட்ட அதிகளவு நெல் - மழையில் நனையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை, மழை காரணமாகவும் வயல்களில் நீர் தேங்கியுள்ளமை காரணமாகவும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து வந்த அறுவடை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், ஈரலிப்பான நெல்லினை விவசாயிகளிடமிருந்து தனியார் நெல் கொள்வனவாளர்கள் 1300 ரூபாயிலும் குறைந்த விலைக்கே பெறுகின்றனர்.

அரசாங்கத்தின் சார்பில் நெல் சந்தைப்படுத்தும் சபையினர் ஈரப்பதன் அகற்றப்பட்ட நெல்லினையே விவசாயிகளிடமிருந்து கோருவதால் - மழையில் நனைந்த நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபையினருக்கு தமது நெல்லினை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, இன்றைய தினமும் அட்டாளைச்சேனையிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையினருக்குச் சொந்தமான களஞ்சியம் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.

அரசாங்கம், நாடு முழுவதும் நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதாகக் கூறிவருகின்ற போதிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவு நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் அட்டாளைச்சேனை விவசாய விசாலிப்பு பகுதியும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • raza Wednesday, 13 February 2013 04:01 PM

    சரியாக சக்காத் கொடுக்காட்டி இப்படித்தான் நடக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X