2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை திறக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

அம்பாறை, திருக்கோவில் கல்வி வலயத்தில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்

திருக்கோவில் கோட்டக் கல்வி வலயத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை, பரமேஸ்வரா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், கனகரெத்தினம் வித்தியாலயம், விநாயகபுரம் மகா வித்தியாலயம், கஞ்சிக்குடியாறு கணேசா வித்தியாலயம், ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி வலயத்தின் கீழ் உள்ள கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் ஆகிய 8 பாடசாலைகளும் அடை மழையால் ஏற்பட்ட  வெள்ளம் காரணமாக கடந்த வியாழக்கிழமை  மூடப்பட்டன.

இந்நிலையில், பெய்து வந்த மழை கடந்த இரண்டு தினங்களாக ஓய்ந்துள்ளது. இந்தப் பாடசாலைகளில்  வெள்ளநீர் வழிந்தோடியுள்ளதைத் தொடர்ந்து தற்போது  பாடசாலைகள் துப்பரவு செய்யப்பட்டு நாளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X