2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாட்டைச் சுட்டு இறைச்சி விற்பனை; பிரதான சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்டு இறைச்சியை விற்பனை செய்த பிரதான சந்தேக நபரை  கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 
வீடு ஒன்றில் இந்தச் சந்தேக நபர் மறைந்திருந்தபோது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்து சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தாமரைக்குளம் பகுதியில் மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்டு இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை ஏற்கெனவே பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், மறைந்திருந்த பிரதான சந்தேக நபரை  பொலிஸார் தேடி வந்திருந்தனர். இந்த நிலையிலேயே பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X