2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சம்மாந்துறையில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை, சம்மாந்துறையில் காட்டு யானைகள் இன்று புதன்கிழமை  அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் அட்டகாசம் புரிந்துள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் பின்புறமாகவுள்ள  மதிலை உடைத்துக் கொண்டு வைத்தியசாலையினுள்;; நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இந்தக் காட்டு யானைகளைக் கண்டு  வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள்  பலர்  பீதியில் கத்தியுள்ளதாகவும் சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் காட்டு யானைகள்  மேற்படி வைத்தியசாலையின்  மற்றைய மதிலை உடைத்துக்கொண்டு வெளியே சென்று சம்மாந்துறைப் பொலிஸ் வீதியில் உள்ள கடை ஒன்றையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் ஊரினுள் நுழைந்த இந்தக் காட்டு யானைகள் பலருடைய வீடுகளின் மதில்களையும் பிரதான நுழைவாயில் கதவுகளையும்  உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X