2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சட்டவிரோத சிகரெட், மதுபானம் வைத்திருந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரையும் வெளிநாட்டுச் சிகரெட்டுக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வீரமுனையில் அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்; கிடைத்த தகவலைத் தொடர்ந்து  சந்தேக நபரின்  வீட்டில்  திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 3 போத்தல்களில் அடைக்கப்பட்ட மதுபானத்தை  விற்பனைக்கு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருதில் 600 வெளிநாட்டுச் சிகரெட்டுக்களை நேற்று புதன்கிழமை கைப்பற்றியதுடன், சந்தேகத்;தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, மேற்படி 600 சிகரெட்டுக்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த வெளிநாட்டுச் சிகரெட்டுக்கள் டுபாய் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக  விசாரணையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X