2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உடற் பயிற்சி நிலையம் நிர்மாணிக்க ஆசிய மன்றம் நிதியுதவி

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல் சக்திவேல்


அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஜிம் சென்றர் என அழைக்கப்படும் உடற் பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஆசிய மன்றத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று மாநகர சபையினால் 31 மில்லியன் ரூபா செலவில் இந்த உடற் பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் மாநகர சபை, தனியார் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனால் அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்திலுள்ள சுனாமியினால் பாதிக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைவிடத்திலேயே உடற் பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஆசிய மன்றம் உள்ளுராட்சி மன்றங்களில் பெருளாதார ஆட்சி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்துடன் இணைந்த கொய்க்கா நிதியுதவின் கீழே இந்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஒப்பந்தத்தில் அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா கையொப்பமிட்டு ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலித்திடம் கையளித்தார். இந்த நிகழ்வில் மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • ibnuaboo Friday, 13 September 2013 06:14 AM

    வரவேற்கத்தக்க தேவையான சேவை. ஹெல்த் இஷ் வெல்த்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X