2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குடிநீரைப் பெறுவதற்கான காசோலைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் 25 பேருக்கு இன்று வியாழக்கிழமை காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா பெறுமதியான காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக காணி சுவீகரிக்கப்பட்டு மாற்றுக்காணி வழங்கப்பட்டவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் இந்தக் காசோலைகள வழங்கி வைக்கப்பட்டன.

துறைமுக காணி உரிமையாளர் அமைப்பின் செயலாளர் ரீ.தஸ்லிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி எம்.எஸ்.ஜஃபர், திராய்க்கேணி கிராம சேவை உத்தியோகத்தர் கே.நல்லரத்தினம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • VALLARASU. Thursday, 12 September 2013 03:51 PM

    நீங்கள் ஒலுவில் மக்களுக்கு கொடுத்துள்ளீர்கள், அவர்கள் நாரே தக்பீர் சொல்லி விட்டு ஹக்கீம் வாழ்க என்று சொல்வார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X