2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புதையல் தோண்ட முற்பட்டவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில், சங்கமன்கண்டி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்டதாகக் கூறப்படும் ஒருவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு  தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து புதையல் தோண்டும் இடத்திற்குச் சென்ற பொலிஸார் புதையல் தோண்ட முற்பட்டதாகக் கூறப்படும் 4 பேரில் ஒருவரை   கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஏனைய மூவரும் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபரிடமிருந்து  மண்வெட்டி, அலவாங்கு, உளி, வெடிபொருளை வெடிக்க வைக்கும் வயர் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X