2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாவிதன்வெளியில் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கோழி வளர்ப்பை ஊக்குவித்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின் வாழும் இருநூறு குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவர்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (13) வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான பீ.எச்.பியசேன, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலர் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X