2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டு பின்னர் அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

திருக்கோவில், குடிநிலப் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது  கணவர் வேலை காரணமாக இரவு வேளை வீட்டிற்கு வராத நிலையில், குழந்தைகளுடன் தான் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு புகுந்த சந்தேக நபர், தன்னை பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டபோது தான் கண்விழித்து கூச்சலிட்டதாகவும்; இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தனது கழுத்திலிருந்த 2 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளதாகவும் குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரை தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த நிலையிலேயே சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .