2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

30 மாடுகளுடன் மூவர் கைது

Janu   / 2025 நவம்பர் 02 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட விரோதமான முறையில் மாடுகளை வாகனங்களில் அடைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட நிலையில் மிருகவதை சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடியில் இருந்து கல்முனைக்கு 23 மாடுகள் கடத்தி வரப்பட்ட நிலையில் ஒரு மாடு இறந்துள்ளதுடன் இரு  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஓட்டமாவடியில் இருந்து கல்முனைக்கு கடத்தி வரப்பட்ட ஏழு மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை மற்றும் மாடுகளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X