Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மார்ச் 22 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் சிறுபோக நெற்செய்கை 5,200 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளார் ரீ. மயூரன், இன்று (22) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் வலது கரை வாய்க்கால்பாசனத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, தீகவாபி, இலுக்குச்சேனை ஆகிய மூன்று வலயங்களில் 2,500 ஏக்கர் நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் ஆற்றுப் பாய்ச்சலுக்குட்பட்ட வீரையடி மற்றும் களிஓடை ஆகிய பிரதேச நெற்காணிகளில் 2,700 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படாத காணிகளுக்கு எக்காரணம் கொண்டு நீர் விநியோகிக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
22 minute ago
48 minute ago
54 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
48 minute ago
54 minute ago
5 hours ago