2025 மே 05, திங்கட்கிழமை

ஆத்மார்த்த பிரார்த்தனை

Princiya Dixci   / 2021 ஜூலை 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கொரோனாவால் உயிரிழந்த காரைதீவைச் சேர்ந்த சமூக சேவையாளர், தேசமான்ய விபுலநேசன் லயன் சின்னதம்பி தங்கவேலுக்கு (வயது 75) ஆத்மார்த்த பிரார்த்தனையும் இறுதி அஞ்சலி நிகழ்வும், காரைதீவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (05) மாலை சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.

மன்றத்தின் உபதலைவர் சோ.ஸூரநுதன் தலைமையில், பணிமன்றத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் மன்றச் செயலாளர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அன்னார், நேற்று முன்தினம் காலை 5.30 மணியளவில் இறைபதமடைந்து, அன்று மாலை 4.30 மணியளவில் அம்பாறையில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

மேற்படி நிகழ்வில் தவிசாளர்,  கோவில்களின் தலைவர்கள், பணிமன்றத்தினர் என மட்டுப்படுத்தப்பட்டளவில் சில பிரமுகர்கள் மாத்திரம் கலந்துகொண்டனர்.

அன்னாரின் இழப்பு, காரைதீவு மண்ணுக்கு பேரிழப்பு என்றும் சகலதுறைகளிலும் அவராற்றிய சமூக சேவைகள் பற்றியும் இதன்போது சகலரும் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X