Editorial / 2020 மே 29 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன், பாறுக் ஷிஹான்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை, ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.
சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சுமார் 03 இலட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில், கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பிரிவினரே இவர்களை, நேற்று (28) நண்பகல் கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நேற்று மாலை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்த போதே, மேற்படி உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிப்பதற்குரிய ஒப்புதல் அடிப்படையில் வழக்கு, கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
28 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
43 minute ago
1 hours ago