Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கொவிட்-19 நிதியத்துக்கென கிழக்கு மாகாண அரச ஊழியர்களிடமிருந்து ஒக்டோபர் மாத சம்பளத்தில் ஒரு நாள் சம்பளத்தை அறவிடக் கோரும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரது சுற்றறிக்கையை உடனடியாக மீளப் பெறுமாறு, இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வோண்டுகோளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருக்கு நேற்று (29) தமது சங்கம் அவசர கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக, அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
“கொவிட் காரணமாக, நாட்டில் சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டு, பல்வேறு துயரங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு அரச ஊழியர்களும் விதிவிலக்கல்ல.
“சகல பொருள்களதும் விலைவாசி உயர்வு காரணமாக மாதாந்த சம்பளத்தை நம்பியிருக்கும் அரச ஊழியர்கள் அனைவரும் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
“ஏனைய மாகாணங்களில் அரச ஊழியர்களிடம் கொவிட் நிதி சேகரிப்பு எதுவும் இடம்பெறாத நிலையில், கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு, சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
“கிழக்கு மாகாணத்தில் சுமார் 45,000 அரச ஊழியர்கள் கடமையாற்ற அதேவேளை, அதிபர், ஆசிரியர்களாக 27,000 பேர் கடமையாற்றுகின்றனர். இதனை அனுமதித்தால், மிகக் கூடுதலான நிதி கல்வித் துறையிலிருந்து அறவிடப்படும்.
“தற்போது அதிபர், ஆசிரியர்களது சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இழுத்தடிக்கிறது. இந்நிலையில், மேற்படி அறவீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க இயலாது” என்றார்.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago