Janu / 2025 மே 28 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை(27) அன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அமைதி வழி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அவர்கள் இலங்கை அரசிடம் நீதி கோரிய போதும் தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதிபன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பாறுக் ஷிஹான்


43 minute ago
50 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
7 hours ago